நாகை மாவட்டத்தில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றால் பாதிக்கப்பட்ட 51 நபர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர்.
அவர்கள் தீநுண்மி தொற்று ஏற்பட்ட கால அளவுகளைப் பொறுத்து 48 நபர்கள் படிப்படியாக பூரண குணமாகி வீடு திரும்பிவந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக சிகிச்சைப் பெற்றுவந்த மீதமுள்ள மூன்று நபர்களைப் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டு அவர்களும் நேற்று (மே 26) மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதனையடுத்து நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 51 நபர்களும் பூரண குணமடைந்து வீடு திரும்பியதால் கரோனா இல்லாத மாவட்டமாக நாகை மாறியுள்ளது.
இதையும் படிங்க:'கரோனா பயமும்... ஊரடங்கும் தேவை இல்லாதது' - நடிகர் மன்சூர் அலிகான்