தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா: நாகை ஆஞ்சநேயருக்கு நடத்தப்பட்ட யாகம் - நாகை ஆஞ்சநேயருக்கு நடத்தப்பட்ட தன்வந்திரி ஹோமம்

நாகை: கரோனா வைரஸிலிருந்து மக்கள் விடுபடவும், உலக நன்மை வேண்டியும் மயிலாடுதுறையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.

nagai hanuman temple conduct dhanvandhir yagam for corona
nagai hanuman temple conduct dhanvandhir yagam for corona

By

Published : Apr 9, 2020, 11:59 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மருத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராம வரதாஹினி மடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி.

ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகள்

இங்கு, கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும், உலக நன்மை வேண்டியும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் கணபதி, தன்வந்திரி, மகா மிருத்யுஞ்சய உள்ளிட்ட யாகங்கள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

ஆஞ்சநேயருக்கு நடத்தப்பட்ட தன்வந்திரி ஹோமம்

தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் யாரும் இந்த யாகதில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. மேலும், பூஜைகளில் ஈடுபட்ட கோயில் நிர்வாகத்தினரும் சமூக இடைவெளிகளை கடைப்பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க:'கரோனாவுக்கு கோவிந்தா தான்!' - ஸ்ரீரங்கத்தில் சிறப்பு யாகம்

ABOUT THE AUTHOR

...view details