தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 50,000 வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியை - முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியை

நாகப்பட்டினம்: தமிழ்நாடு முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு 50 ஆயிரம் ரூபாய் அனுப்பிய அரசுப் பள்ளி ஆசிரியை பலரது பாராட்டையும் பெற்று வருகிறார்.

Nagai government school teacher gives money to TN CM corona relief fund
Nagai government school teacher gives money to TN CM corona relief fund

By

Published : Mar 28, 2020, 10:54 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் வசந்தா சித்திரவேலு என்பவர் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். இவர், 50 ஆயிரம் ரூபாய்யை கரோனா நிவாரண நிதிக்காக தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வேதாரண்யம் அருகேயுள்ள கருப்பம்புலம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தா சித்திரவேலு, தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். அதுமட்டுமின்றி இவர் பல்வேறு சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திவருகிறார்.

கடந்த ஆண்டு பருவ மழையின்போது வேதாரண்யம் பகுதி பள்ளிகளில் படிக்கும் ஆயிரம் மாணவ, மாணவியருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் இவர் குடைகளை வாங்கி வழங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நிவாரண நிதி வழங்கியச் செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

இதையும் படிங்க... கரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்க ரூ.50 லட்சம் நிதி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details