கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் நாகை மீன்பிடித் துறைமுகம், மீன் ஏலக் கூடங்கள், மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், நாகை வட்டத்துக்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாறு ஆகிய 3 கிராம மீனவர்கள் இன்று மாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை நிறுத்தியுள்ளனர்.