நாகையை அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என கடந்த 2015ஆம் ஆண்டு, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படாமலேயே உள்ளது.
இதனைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொழில் மறியல், காத்திருப்பு போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து மீனவர்களுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் மீன்வளத்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.