நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அவர் உள்ளிட்ட 4 மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
நாகையில் கடல் சீற்றத்தினால் மீனவர் பலி! - நாகை
நாகை: நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர், திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர்கள் இன்று மதியம் வேளாங்கண்ணியில் இருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் நிலைதடுமாறி படகின் ஓரத்தில் நின்றிருந்த கீச்சாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற மீனவர் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்தார்.
இதையடுத்து, கடலில் விழுந்த ராமச்சந்திரனை படகில் இருந்த சக மீனவர்கள் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், ராமச்சந்திரன் நடுக்கடலிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கரைக்கு கொண்டு வரப்பட்ட மீனவரின் உடல் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.