நாகை மாவட்டம் வேதாரண்யத்தையடுத்த ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த சிவகுமார் என்பவருக்குச் சொந்தமான படகில், அவர் உள்ளிட்ட நான்கு பேர் கோடியக்கரைக்கு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
நடுக்கடலில் மீன்பிடி வலைகளைப் பறித்துக்கொண்டு மீனவர்கள் விரட்டியப்பு - Nagai fisherman attack
நாகை: நடுக்கடலில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி அடையாளம் தெரியாத நபர்கள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகளையும் மீன்களையும் கொள்ளையடித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![நடுக்கடலில் மீன்பிடி வலைகளைப் பறித்துக்கொண்டு மீனவர்கள் விரட்டியப்பு Nagai fisherman attack](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:25:00:1598442900-tn-ngp-03-fisherman-attack-script-7204630-26082020172400-2608f-02171-712.jpg)
Nagai fisherman attack
அப்போது மற்றொரு படகில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மீனவர்கள் படகில் வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலை, மீன்களைப் பறித்துக்கொண்டு விரட்டி அடித்தனர்.
இதனையடுத்து அவசர அவசரமாகக் கரை திரும்பிய ஆறுக்காட்டுத்துறை மீனவர்கள் வேதாரண்யம் கடலோரக் காவல் படை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக்கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.