டெல்டா மாவட்ட கடைமடைப் பகுதியான நாகை மாவட்டத்தில் 158 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வேதாந்தா, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு... நிறுவனச் சின்னங்களை எரிப்பு! - ஓஎன்ஜிசி
நாகப்பட்டினம்: கடைமடைப் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காமேஸ்வரத்தில் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றியும், வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவன சின்னங்களை எரித்தும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
![ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு... நிறுவனச் சின்னங்களை எரிப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3410641-173-3410641-1559078335111.jpg)
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் அப்பகுதி விவசாயிகளும், மீனவர்களும் ஹைட்ரோகார்பன் எடுக்க முற்பட்டால் வேதாந்தா ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு எதிராகப் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காமேஸ்வரத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சோலைவனத்தைப் பாலைவனமாக்கும் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என முழக்கங்களை எழுப்பிய கிராம மக்கள், அந்நிறுவனங்களின் சின்னத்தினை எரித்து தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.