மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீரை நம்பி இவ்வாண்டு நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். இதில், டெல்டா மாவட்டத்தின் கடைமடைப் பகுதியில் உள்ள பெரும்பாலான ஆறு, ஏரி, வாய்க்கால்கள் இன்னும் தூர்வாரப்படாமல் அப்படியே கிடக்கின்றன. இதனால் மேட்டூர் அணையிலிருந்து கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வருவது என்பது தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது.
வாய்க்காலை தூர்வாரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் விவசாயிகள் மனு! - petition to collector
நாகை: பாசன வாய்க்கால்களை தூர்வாரக் கோரி அவற்றின் புகைப்படங்களை கழுத்தில் அணிந்து, மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் விவசாயிகள் மனு அளித்தனர்.
வாய்க்காலை துர்வாரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் விவசாயிகள் மனு!
இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள தேவநதி, வெட்டாறு, முடிகொண்டான் ஆறு உள்ளிட்ட பல்வேறு பாசன வாய்க்கால்களை உடனடியாக தூர் வாருவதுடன், அங்கு பழுதடைந்து கிடக்கும் மதகுகளை சீரமைக்க வேண்டுமென கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள் பழுதடைந்த வாய்க்கால்கள் மற்றும் சேதமடைந்த மதகுகளின் புகைப்படங்களை கழுத்தில் அணிந்தவாறு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.