நாகை மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 410ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 ஆயிரத்து 893 பேர் குணமடைந்துள்ள நிலையில், 432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை கரோனா தொற்றால் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
நோயின் தாக்கம் பொருத்து தொடர்ந்து, மருத்துவமனைகளிலும், தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று (அக்டோபர் 3) தொற்று உறுதியான மூன்று பேர் நாகை தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
போதிய வசதி இல்லாத நாகை கரோனா வார்டு இவர்கள் படுக்கை வசதி இல்லாமல் கழிவறை அருகே தரையில் படுத்து இருப்பதாகவும், கழிவறையிலிருந்து கழிவு நீர் வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் கொசுக்கள் உற்பத்தியாகி, புதிதாக டெங்கு போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனால் நோயாளிகள், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அங்கு இருக்கும் பிரச்னை குறித்து செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று கரோனா பாதிப்பு: 5,489 பேருக்கு உறுதி, 66 பேர் உயிரிழப்பு!