நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் 1738 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் பல்வேறு கட்சிகளில் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
நாகை வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு! - Nagai constituency
நாகை: மயிலாடுதுறை அருகேயுள்ள ஏவிசி கல்லூரி வாக்கு மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு, நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பின்னர் சீல் வைக்கப்பட்ட வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்குச்சாவடிகளில் இருந்து ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனத்தில் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான மயிலாடுதுறை மன்னம்பந்தல் தனியார் கல்லூரியில் (ஏவிசி கல்லூரி) பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இதில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு காப்பு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் முன்னிலையில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்ட 6 சட்டமன்ற தொகுதி காப்பார்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு முதலாவதாக துணை ராணுவப் படை வீரர்கள், இரண்டாவதாக தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர், மூன்றாவதாக மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், நான்காவதாக மாவட்ட தாலுகா காவல் நிலைய காவலர்கள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் 4 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.