தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாதாளச் சாக்கடைத் திட்ட குளறுபடிக்கு நகராட்சியின் பராமரிப்பு குறைவே காரணம்' - நாகை மாவட்ட ஆட்சியர்! - nagai collector praveen nayar

நாகை: மயிலாடுதுறையில் பாதாளச் சாக்கடை திட்ட குளறுபடிக்குக் காரணம், நகராட்சியின் பராமரிப்பு குறைபாடு தான் என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்ட ஆட்சியர்

By

Published : Nov 7, 2019, 11:57 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் ரூ. 42 கோடி மதிப்பீட்டில் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2008ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், இத்திட்டம் தொடக்கத்திலிருந்தே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதாளச் சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, பிரதான சாலைகளில் இதுவரை 13 முறை பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் குடிநீர் வடிகால் வாரியம், கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர் அடங்கிய கூட்டுக் குழு அமைக்கப்பட்டு மயிலாடுதுறையில் அனைத்துப் பகுதிகளிலும் பாதாளச் சாக்கடை திட்டம் ஆய்வு செய்யப்பட்டது.

நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர்

இந்த ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் கூறுகையில், "பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு சிமெண்ட் பைப்புகள் போடப்பட்டதாலும், பராமரிப்பு செயல்பாடு குறைவு காரணமாகவும், இன்னும் சில காரணங்களாலும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதேபோல், இன்னும் ஒரு சில இடங்களில் பள்ளங்கள் தோன்ற வாய்ப்பு உள்ளது. இதற்கு மெயின் பைப் லைனை மாற்றுவதே நிரந்தர தீர்வு என பொறியாளர் குழுவினர் கண்டறிந்துள்ளனர். இந்த நீண்டகால தீர்வுக்கான செலவுக்கு நகராட்சியில் நிதி போதுமானதாக இல்லை. எனவே இதனை கூட்டு ஆய்வுக்குழு மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.


இதையும் படிங்க: ’சாதியக் கொலைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ - நெல்லையின் புதிய எஸ்பி

ABOUT THE AUTHOR

...view details