நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார் கோயில் மேலமுக்கூட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்(42). இவர் அஸ்ஸாம் மாநில எல்லையோரப் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரராக உள்ளார். அவரது மனைவி ஜெயலட்சுமி(40), மூன்று மகள்கள் ஆகியோர் செம்பனார் கோயிலில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரரான ஞானவேல் குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக நிலத் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் ராணுவ வீரரின் இடத்தில் உள்ள மரத்தை ஞானவேல், அவரது குடும்பத்தினர் வெட்டியுள்ளனர். இதை தட்டிக் கேட்டதால் ராணுவ வீரரின் மனைவி ஜெயலட்சுமியை ஞானவேல், அவரது மனைவி, மகன் ஆகியோர் சேர்ந்து அடித்து துன்புறுத்தியுள்ளனர்.