தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆபத்தை உணராமல் நாகை இளைஞர் செய்த செயல் - வைரலாகும் வீடியோ..! - நாகை இளைஞர்கள் வைரலாகும் வீடியோ

நாகை : ஆபத்தை உணராமல் பழுதடைந்த பாலத்தின் விரிசலில் புகுந்து வெளியே வரும் இளைஞர் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

nagai bridge issues

By

Published : Nov 24, 2019, 12:05 PM IST

நாகை நகராட்சிக்கு உட்பட்ட அக்கரைக்குளம் பகுதியில் பழமை வாய்ந்த தேவநதி பாலம் கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் மழை காரணமாக பாலத்தின் நடுவே ஆழ்துளை கிணறு போல பெரிய விரிசல் விழுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்த விரிசல் வழியாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், பாலத்தின் ஆபத்தை உணர்த்துவதற்காக பாலத்தின் கீழ் வழியாக இறங்கி வெளியே வருகிறார். இதை இளைஞர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வளைதலங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்து அந்த இளைஞர் கூறுகையில், பலமுறை புகார் அளித்தும் அரசு அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் வாதிகள் ஓட்டு கேட்க மட்டும் தங்கள் பகுதிக்கு வருவதாக அந்த வீடியோ ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.

பழுதடைந்த பாலத்தின் விரிசலில் இறங்கும் இளைஞர்

மேலும் பாலத்தை விரைந்து சீரமைக்கவில்லை என்றால் மக்களே ஒன்று திரண்டு பாலத்தை இடித்து தள்ளி விடுவோம் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:

நாகையில் சாலையை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details