தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

படகு கவிழ்ந்து விபத்து: இருவர் மீட்பு, ஒருவரை தேடும் பணி தீவிரம்! - பைபர் படகு கவிழ்ந்து விபத்து

நாகை: கடல் சீற்றத்தின் காரணமாக பைபர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மீனவரை தேடும்பணி தீவிரமடைந்துள்ளது.

Nagai Boat Accident, two fisher man recoverd
படகு கவிழ்ந்து விபத்து: இருவர் மீட்பு, ஒருவரை தேடும் பணி தீவிரம்!

By

Published : Nov 28, 2019, 9:51 PM IST

கடந்த சில தினங்களாக நாகையில் அவ்வபோது கனமழை பெய்வதைத் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில், நாகை, கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பருக்குச் சொந்தமான பைபர் படகில் அதே பகுதியைச் சேர்ந்த முகிந்தன், முருகவேல், வேலாயுதம் உள்ளிட்ட மூன்று பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, மீன் பிடித்துவிட்டு கரைதிரும்பி கொண்டிருக்கும்போது, நாகை துறைமுகம் முகத்துவாரம் அருகே கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதில், மூவரும் வந்த படகு கடல் அலையில் சிக்கி கவிழ்ந்துள்ளது.

படகு கவிழ்ந்து விபத்து: இருவர் மீட்பு, ஒருவரை தேடும் பணி தீவிரம்!

இந்த விபத்தில் படகில் இருந்த மூவரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அந்த பகுதியில் படகில் வந்த சாமந்தான்பேட்டை கிராம மீனவர்கள் கடலில் தத்தளித்த வேலாயுதம், முகிந்தன் ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், கடலில் மாயமான முருகவேலை சக மீனவர்களும், கடலோர காவல் துறையினரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க... மாணவர்களுக்கு தினமும் உடற்கல்வி - பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details