தமிழ்நாடு

tamil nadu

பழைய காசுக்கு பிரியாணி; காற்றில் பறந்த தகுந்த இடைவெளி!

By

Published : Oct 18, 2020, 4:41 PM IST

நாகை: சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் அருகே பழைய நாணயங்களுக்கு பிரியாணி வாங்க தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் குவிந்ததால், கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பழைய காசுக்கு பிரியாணி: காற்றில் பறந்த சமூக இடைவெளி!
பழைய காசுக்கு பிரியாணி: காற்றில் பறந்த சமூக இடைவெளி!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே 18 ரெஸ்டாரன்ட் திறப்பு விழா இன்று (அக். 18) நடைபெற்றது. இந்தத் திறப்பு விழாவை முன்னிட்டு பிரியாணி வாங்க ஒரு பைசா, 2 பைசா, 5 பைசா, 10 பைசா, 20 பைசா உள்ளிட்ட பழைய காசுகளை எடுத்து வருபவர்களுக்கு இரண்டு பிரியாணி இலவசம் என சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது.

மேலும், காவலர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்களுக்கு பிரியாணி இலவசம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காற்றில் பறந்த தகுந்த இடைவெளி

இதனால் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஒருவரை ஒருவர் முண்டியடித்து பிரியாணியை வாங்கிச் சென்றனர். இதனால் அங்கு கரோனா பரவும் அபாயம் ஏற்ப்பட்டது.

இதையும் படிங்க...'2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் மேலும் பலர் சிக்குவர்' - அமைச்சர் செல்லூர் ராஜூ

ABOUT THE AUTHOR

...view details