நாகை மாவட்டம் சீர்காழி அருகே சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (70). இவரும் இவரது மகள் செல்வியும் (50) ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக செல்வியின் தாய் ராஜேஸ்வரி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்து தனது வீட்டின் பின்புறத்தில் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தாயின் அலறல் சத்தம் கேட்டு அவரை காப்பாற்ற முயன்ற செல்விக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.