தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நாகையில் மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்' - தப்பியோடியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு! - நாகையில் மதுபாட்டில்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

நாகப்பட்டினம்: நண்டலாறு சோதனைச் சாவடியில் பொறையாறு காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில் இரண்டு கார்களில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாகையில் மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்
நாகையில் மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

By

Published : Dec 25, 2019, 6:44 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே நண்டலாறு சோதனைச் சாவடி உள்ளது. இங்கு பொறையாறு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காரைக்கால் பகுதியிலிருந்து வேகமாக வந்த இரண்டு கார்களை அவர்கள் நிறுத்தினர். ஆனால் காவல் துறையினரை கண்டவுடன் கார் ஓட்டுநர்கள் காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு தப்பி ஓடினர்.

நாகையில் மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

பின்னர் இரண்டு கார்களையும் சோதனை செய்ததில், ஒரு காரில் 35 அட்டை பெட்டிகளில் ஆயிரத்து 680 மதுபாட்டில்களும், மற்றொரு காரில் புதுச்சேரி மாநில 100 மில்லி சாராயம் இரண்டாயிரத்து 150 பாக்கெட்டுகளும் இருந்தது தெரியவந்தது.

உடனே காவல் துறையினர் மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த இரண்டு கார்களை பறிமுதல் செய்து அதிலிருந்து தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details