மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியின் நாம் தமிழர் கட்சி சட்டப்பேரவை வேட்பாளராக அ. கவிதா என்பவரை அக்கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் அறிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் ஆண்-பெண் வேட்பாளர்களை சரிபாதியாக தேர்வு செய்து தனித்து நிற்பதாகவும் சீமான் அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து சீர்காழி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் அ. கவிதா இன்று சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் தனது முதல் நாள் பரப்புரையை தொடங்கினார். பேருந்து நிலையத்தில் இருந்து கட்சியின் உறுதிமொழியேற்ற பின்னர் தொண்டர்களுடன் வீதி வீதியாக சென்று பரப்புரை மேற்கொண்ட அவர் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.