நாகப்பட்டினம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை கடற்கரைப் பகுதியில் மூன்றடி நீளமும், இரண்டடி அகலமும், உள்புறம் 15 அறைகளும் கொண்ட மரத்தால் ஆன பெட்டி ஒன்று இரவு கரை ஒதுங்கியுள்ளது.
இதனைக்கண்ட ஆறுக்காட்டுத்துறை மீனவர்கள், காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மரப்பெட்டியைக் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
அந்தப் பெட்டியில் உள்ள 15 அறைகளிலும் வெண்மை நிற பவுடர் நிரப்பப்பட்டுள்ளது. அந்தப் பவுடர் போதைப்பொருளா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், கடல் வழியாகக் கடத்திச் சென்றபோது தவறி கடலில் விழுந்திருக்கலாம் என்றும் எண்ணுகின்றனர்.
கடற்கரையில் கிடைத்த மரப்பெட்டி கடந்த வாரத்தில் மட்டும் இதுபோல், இரண்டு மரப்பெட்டிகள் வேதாரண்யம் பகுதி கடற்கரையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. ஒரே வாரத்தில் வேதாரண்யம் பகுதிகளில் மூன்றாவது முறையாக மரப்பெட்டி கரை ஒதுங்கியுள்ளதால் காவல் துறையினர், தங்களது விசாரணையை வேகப்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: கடலில் ஒதுங்கும் மரப்பெட்டிகளால் சந்தேகம்?