தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவரிடம் சாதி பெயர் கேட்டு அடித்த மர்மநபர்? - மாணவன் அருகில் வந்து நீ எந்த ஊர்

மயிலாடுதுறையில் பேருந்து ஏறுவதற்காக காத்திருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவரை நீ எந்த சாதி என்று கேட்டு மர்மநபர் ஒருவர் தாக்கிய சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவரிடம் சாதி பெயர் கேட்டு அடித்த மர்மநபர்?
பள்ளி மாணவரிடம் சாதி பெயர் கேட்டு அடித்த மர்மநபர்?

By

Published : Oct 18, 2022, 7:27 PM IST

மயிலாடுதுறை செம்பனார்கோவில் அருகே வல்லம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் மயிலாடுதுறை தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவன் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக கீழநாஞ்சில்நாடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் மாணவன் அருகில் வந்து நீ எந்த ஊர்? என்ன சாதி? என்று கேட்டுள்ளார். மாணவன் தனது சாதியை (தாழ்த்தப்பட்டோர்) சொன்னவுடன் அந்த மர்மநபர் மாணவனை கன்னத்தில் அறைந்து தலையைப் பிடித்து சுவற்றில் மோதியதாக கூறப்படுகிறது.

அப்பகுதியில் நின்றவர்கள் மர்ம நபரிடம் இருந்து மாணவனை மீட்டு பேருந்தில் ஏற்றி மாணவனின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்மநபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கேரளா TO தமிழ்நாடு - கோவையில் 2 டன் குட்கா பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details