தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முடவன் முழுக்கு: காவிரியில் நீராடிய பக்தர்கள்

மயிலாடுதுறை: முடவன் முழுக்கை முன்னிட்டு காவிரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை தரிசித்தனர்.

mylord
mylord

By

Published : Nov 16, 2020, 1:48 PM IST

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாள்களும் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம், காவிரியில் நீராடி, இறைவனை வழிபட்டு, தங்கள் பாவத்தை போக்கியதாக ஐதீகம்.

அதன்படி, காவிரியில் ஐப்பசி மாதம் நீராட விரும்பிய, உடல் ஊனமுற்ற ஒரு பக்தர், ஐப்பசி மாதம் முடிவதற்குள், மயிலாடுதுறை காவிரிக்கரைக்கு வரமுடியவில்லை. அந்த பக்தருக்காக மனம் இரங்கிய இறைவன், முடவனுக்கு ஐப்பசி மாதம் முடிந்த மறுநாள், காவிரியில் நீராடிய பலனை அளித்தார்.

முடவன் முழுக்கு

அதன்படி, ஆண்டுதோறும் கார்த்திகை 1ஆம் நாள், முடவன் முழுக்கு என்ற பெயரில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக, மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் இருந்து சுவாமி புறப்பாடு கோயிலில் மட்டும் நடைபெற்றது.

தொடர்ந்து அஸ்திர தேவர் மட்டும் காவிரிகரைக்கு எடுத்து செல்லப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அஸ்திரதேவருக்கு பால், பன்னீர், சந்தனம், திரவியப்பொடி கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details