தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவிலிருந்து யாவரும் குணமடைய நாகூரில் வழிபாடு - nagoor mosque special prayer in nagapattinam

நாகப்பட்டினம்: கரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் குணமடைய வேண்டி நாகூர் தர்கா அருகில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தினர்.

nagapattinam
nagapattinam

By

Published : May 25, 2020, 3:09 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள நாகூர் தர்கா மிகவும் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு முழுவதும் பள்ளிவாசல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக நாகூர் தர்கா வெறிச்சோடிக் காணப்பட்டது. தர்கா, பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டதன் எதிரொலியாக, இஸ்லாமியர்கள் அவர்களது வீடுகளிலேயே இன்று ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடத்தினர்.

இதனிடையே, நாகூர் தர்கா கால்மாட்டு வாசலில் கூடிய இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குணமடைய வேண்டி, அவர்கள் வேண்டிக்கொண்டனர்.

நாகூர் தர்கா அருகில் இஸ்லாமியர்கள் சிறப்பு வழிபாடு

இதையும் படிங்க:உற்சாகத்தை இழந்த ரமலான் - பள்ளிவாசல் முன்பு காவலர்கள் குவிப்பு

ABOUT THE AUTHOR

...view details