தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

30 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த கொலை குற்றவாளி கைது! - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகப்பட்டினம்: காரைக்காலில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளியை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

30 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த கொலை குற்றவாளி கைது!
Murder accused arrested

By

Published : Aug 26, 2020, 7:56 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்துள்ள கடம்பங்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் அடைக்கலதாஸ். இவரது தந்தை ராஜமாணிக்கம் இறந்து விட்ட நிலையில் இவரது தாயார் சம்மனசுமேரியுடன் காரைக்காலுக்கு குடிபெயர்ந்து கூலி வேலை செய்து வந்துள்ளார்.

மேலும், இவரது தாயார் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரை இரண்டாவது கணவராக ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தச் சூழலில் 1990 ஆம் ஆண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக சாமிக்கண்ணு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கிற்கு தொடர்பில்லையென அடைக்கலதாசின் தாயார் சம்மனசுமேரி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆனால் அடைக்கலதாஸ் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனையடுத்து காரைக்கால் நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளி என அறிவித்தது.

அதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக திருநள்ளார் காவல் துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில் கும்பகோணத்தில் கூலி வேலை செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட திருநள்ளாறு காவல் துறையினர் அவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று கைது செய்து காரைக்காலுக்கு கொண்டு வந்தனர்.

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை கைது செய்த காவல் துறையினர் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

28 வயதில் கொலை செய்து தலைமறைவானவர் 30 ஆண்டுகள் கழித்து 58 வயதில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details