தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பன்றிகள் சிக்கின: நிம்மதியில் பொதுமக்கள்! - பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பன்றிகள் பிடிப்பு

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் நீண்ட நாள்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பன்றிகளை நகராட்சி நிர்வாகத்தினர் பிடித்து வனப்பகுதியில் விட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பன்றிகள் பிடிப்பு
பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பன்றிகள் பிடிப்பு

By

Published : Dec 29, 2020, 10:28 PM IST

நாகப்பட்டினம் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக பன்றி தொல்லை அதிகரித்து காணப்படுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நகராட்சி ஆணையர் சுப்பையா உத்தரவின்பேரில் மதுரையிலிருந்து பன்றிகளை பிடிக்க பயிற்சி பெற்ற தனியார் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

பின்னர், காவல் துறை பாதுகாப்புடன் அவர்கள் மயிலாடுதுறை இந்திரா காலனி, ஆனந்ததாண்டவபுரம் சாலை, தூக்கணாங்குளம், திருவாரூர் சாலை, புது தெரு உள்ளிட்ட பகுதிகளில் 15 பன்றிகளை உயிருடன் பிடித்தனர்.

பன்றிகள் வலை வீசி பிடிப்பு

பிடிபட்ட பன்றிகளை ஊழியர்கள் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதனால் பல காலமாக பன்றி தொல்லையால் அவதிப்பட்டுவந்த மக்கள் தற்போது நிம்மதியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆம்பூரில் காட்டுப் பன்றியை வேட்டையாடியவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details