நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நகராட்சிக்குச் சொந்தமான 167 கடைகள் உள்ளன. இதில் 80 கடைகளின் குத்தகைதாரர்கள் 2016 ஆம் ஆண்டு முதல் முழுமையாகவோ, பகுதியாகவோ வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு மூன்று கட்டமாக நகராட்சி நிர்வாகம் வாடகையைச் செலுத்தக்கோரி எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. அதன் பின்னரும், அக்கடைகளின் குத்தகைதாரர்கள் வாடகை கட்டணம் செலுத்தாமலே இருந்துவந்துள்ளனர். இதனால் வாடகை செலுத்தாத கடைகளைப் பூட்டி சீல் வைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் நேற்று தொடங்கியது.