கரோனா பெருந்தொற்று பரவலால், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக, வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் விதிமுறைகளை மீறி செயல்படும், வணிக நிறுவனங்களுக்குச் சீல் வைத்தும், அபராதம் விதித்தும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்த நகராட்சி அலுவலர்கள் - lockdown actions nagapattinam
மயிலாடுதுறை: முகக்கவசமில்லாமல், வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டிகளுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது.
சாலையில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதை மீறுபவர்களுக்கு, அபராதம் விதிக்கப்படும் என நாகப்பட்டினம் ஆட்சியர் பிரவீன் பி. நாயர் ஆணை பிறப்பித்தார். இதையடுத்து, மயிலாடுதுறை நகராட்சி கூறைநாடு, மணிக்கூண்டு பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்றவர்களுக்கு நகராட்சி முதன்மை சுகாதார மருத்துவ அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையில், ரூபாய் 100 அபராதம் விதித்து, நகராட்சி அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:யாசகத்தைக் கொடுக்காதீர்கள்... தொழில் கற்றுக் கொடுங்கள்!