நாகை மாவட்டம் அடுத்துள்ள, பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முஹம்மது பைசான். இவர் மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்ட புகைப்படத்தை, 'என்னதான் சொல்லு மாட்டுக்கறி மாட்டுக்கறிதான்யா' என்ற வாசகத்துடன் அவர் முகநூலில் பதிவிட்டிருந்தார். இதைக் கண்ட இந்து மக்கள் கட்சி, அமமுகவுடன், பிற கட்சி பிரமுகர்கள் சேர்ந்து முஹம்மது பைசானை, அவர் வீட்டிற்குள் நுழைந்து கூர்மையான ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் கை, தோலில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.