மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா கடவாசல் கிராமத்தில் உள்ள பால சாஸ்தா, மகா மாரியம்மன் கோவில் மகா குடமுழுக்கு விழாவில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "எனது நீண்டகால நண்பர் சாமிநாதன் சரவணன், கடவாசல் கிராமத்தினர் இணைந்து நடத்திய கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பளித்ததற்கு முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நன்றி. தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன். எந்தெந்த தொகுதிகள், தொகுதி பங்கீடு பேசுவதற்கு காலம் இருக்கிறது. முதலமைச்சர் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால், அதை முடித்துவிட்டு வந்த பின்பு சந்திப்போம் என்றார்.
தொடர்ந்து, நீங்கள் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவரை அவதூறாக பேசியதாக கூறப்படுவது குறித்து கேட்தற்கு, ஆதாரங்கள் இருந்தால் வழக்குப் போடுங்கள். எந்த சமுதாயத்தைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், தனிநபர் பற்றியும், யார் மனதும் புண்படும் படி 50 இதுவரை பேசியது கிடையாது.
அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களாகவே கற்பனை செய்து கொண்டு பேசினால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. நான் யார் ஒருவர் மீதும் தனிப்பட்ட தவறான தாக்குதலோ கருத்துக்களையோ சொல்லியிருந்தேன் என்று சொன்னால் சட்டப்படி என் மீது புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கலாம். பொதுவாக முகநூல், வாட்ஸ் அப்பில் வரக்கூடிய தகவல்களை புகாராக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கும் காவல்துறை நிர்வாகம், நான் யாரைப் பற்றியாவது தவறாக பேசி இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அது ஒரு பொய்யான வதந்தி என்றார்.
இதையும் படிங்க: கமல் தான் ஒரிஜினல் அரசியல்வாதி' - சினேகன்