கரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா வாகனங்களை இயக்கி வந்த ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக வருமானமின்றி தவித்து வருகின்றனர். இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இ.எம்.ஐ தவணையை ரத்து செய்யக்கோரி போராட்டம்! - கரோனா நிவாரணம்
நாகை: இ.எம்.ஐ தவணை வட்டியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், வாகனத்தின் விளக்குகளை எரியவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இன்று(ஜூலை22) அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டிகள் நலச்சங்கம் சார்பில் அமைதி வழி அறப்போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பங்கேற்ற இப்போராட்டத்தில், சுற்றுலா வாகனங்களுக்கான இ.எம்.ஐ தவணை வட்டியை ரத்து செய்ய வேண்டும், இயங்காத வாகனங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், ஓட்டுநர்களுக்கு கரோனா பேரிடர் கால நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாகனங்களின் விளக்குகளை எரியவிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டிகள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், இன்று ஒருநாள் இயக்காமல் ஆங்காங்கே உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.