மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தியாகராஜன் நகரைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் ஏலசீட்டு நடத்தினார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் மட்டும் வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அவரது மனைவி சாந்தி (55), மகன் ராமு (27) ஆகிய இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ராமு பெட்டிக்கடை நடத்திவந்தார். சீட்டு பணம் கட்டிய நபர்கள் பணம் கேட்டு தாயையும் மகனையும் நெருக்கடி கொடுத்துள்ளனர்.