நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக விதைப்பந்து தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு, ஒரு லட்சத்து 30 ஆயிரம் விதைப்பந்துகள் தயார் செய்தனர். மாட்டுச் சாணம், எரு மண் ஆகியவை கலந்த கலவையில் விதைப்பந்துகள் தயாரிப்பதற்கு, நாட்டுமர விதைகளான பூவரசு, வாகை, சிலவாகை, கருவாகை, ஆணைகுண்டுமணி, இலுப்பை, பரம்பை எனப் பல வகையான விதைகள் பயன்படுத்தப்பட்டன.