தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்! - வழக்கறிஞர்கள் போராட்டம்

நாகை: மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வழக்கறிஞர்கள் போராட்டம்

By

Published : Jul 24, 2019, 11:57 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு, புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று மயிலாடுதுறை கோட்டத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மயிலாடுதுறை கோட்டத்தில் ஐந்து நாட்களாக கடையடைப்பு, நீதிமன்ற புறக்கணிப்பு, மனித சங்கிலி போன்ற பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்!

இதனை முன்னிட்டு நேற்று 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காவல்துறையினரின் தடுப்பையும் மீறி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை பேரணியாகச் சென்று முற்றுகையிட்டனர். அப்போது, அலுவலகத்தில் எம்எல்ஏ இல்லாத நிலையில், கோரிக்கை மனுவை, அலுவலகத்தின் கதவில் ஒட்டி, கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details