தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊருக்குள் புகுந்த குரங்குகள் அட்டகாசம்  - அச்சத்தில் கிராம மக்கள்

சீர்காழி அருகேவுள்ள கிராமத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வரும் இரண்டு குரங்குகள் பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

குரங்கு குப்பன்
குரங்கு குப்பன்

By

Published : May 13, 2022, 11:00 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகேவுள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்திற்குள் நுழைந்த இரண்டு ஆண் குரங்குகள் அப்பகுதிகளிலுள்ள மக்களையும், ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங்குகளையும் கடித்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்நிலையில் கிராமத்தில் வசிக்கும் குணசேகரன் என்பவரது வீட்டிற்குள் உணவு தேடி புகுந்த குரங்கு, அவரை கடித்துள்ளது. குணசேகரின் அலறல் சத்ததை கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று குரங்கை விரட்டியதுடன், அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு இதே குரங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கடித்து குதறியது. அப்போது குரங்கை பிடிக்க வனத்துறை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. தற்போது மீண்டும் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் கூண்டுகளுடன் அவற்றை பிடிக்க கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். குரங்குகளின் செயலால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: வாட்டர் டேங்க்கில் வான்டடாக குளியல் போட்ட குரங்குகள்

ABOUT THE AUTHOR

...view details