தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரண நிதிக்கு அனுப்பிய சிறுமி; பரிசளித்த அரசு - A girl who paid for a relief fund in Nagai

நாகை: சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த 2,210 ரூபாய் பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பிய சிறுமிக்கு, புதிய சைக்கிள் ஒன்றினை பரிசாக அளித்து மாவட்ட காவல் துறையினர் அசத்தியுள்ளனர்.

சிறுமிக்கு வழங்கப்பட்ட பரிசு
சிறுமிக்கு வழங்கப்பட்ட பரிசு

By

Published : May 18, 2020, 9:13 PM IST

நாகை மாவட்டம் காமேஷ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பூமாலை. இவர் மாவட்ட காவல் துறையினரின் கீழ் செயல்படும் காவல் நண்பர்கள் குழுவில் (Friends Of Police) இணைந்து கரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது 10 வயது மகள் கனகா, கரோனா பாதிப்பால் ஏழை மக்கள் படும் துயரத்தைத் தாங்க முடியாமல் தான் ஆசையாக சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த 2,210 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக அளித்துள்ளார்.

இச்செய்தியை அறிந்த தமிழ்நாடு உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறை இயக்குநர் டாக்டர் பீரதீப் வி.பிலிப் சிறுமியின் சைக்கிள் வாங்கும் ஆசையை நிறைவேற்றும் வகையில் சிறுமி கனகா, சிறுமியின் சகோதரர் கோகுல் ஆகியோருக்கு புதியதாக சைக்கிள்களை வாங்கி நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் மூலம் பரிசளித்துள்ளார்.

இதையும் படிங்க: 8 நாளில் 1300 கி.மீ. சைக்கிள் பயணம்... தந்தையைச் சொந்த ஊர் அழைத்துச் சென்ற சிறுமி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details