நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே உள்ள பரசலூர் ஊராட்சி, ராஜராஜன் தெருவைச் சேர்ந்தவர் கலியவரதராஜன் (65), தனது மனைவி பானுமதி உடன் தனியாக வீட்டில் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் சுப நிகழ்ச்சி ஒன்றுக்கு வீட்டின் கதவை பூட்டிவிட்டு, அருகே சாவியை வைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் சாவியைக் காணவில்லை. உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்திருந்தது. அதிலிருந்த 11 பவுன் நகை, பத்தாயிரம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.