தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடமாடும் காய்கறி விற்பனை: எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார் - நடமாடும் காய்கறி அங்காடி

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் ஒன்றியத்தில் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

நடமாடும் காய்கறி அங்காடி: தொடங்கி வைத்த எம்எல்ஏ!
காய்கறி வாகனம்

By

Published : May 26, 2021, 10:47 AM IST

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்திலுள்ள 57 ஊராட்சிகளுக்கு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் வாகனம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியக்குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். இந்நிகழ்வில், தோட்டக்கலைத்துறை உதவி வேளாண்மை இயக்குநர் குமரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பொன்னி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நடமாடும் காய்கறி அங்காடி: தொடங்கி வைத்த எம்எல்ஏ!

இதில், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன் பங்கேற்று, நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை கொடியசைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைபிடித்து காய்கறிகளை வாங்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details