மயிலாடுதுறை மக்களைத் தொகுதி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரிபாயுதினை ஆதரித்து இன்று மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அக்கட்சின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
'நான் எப்போதும் உங்களில் ஒருவனாக இருப்பேன்'- கமல்ஹாசன்! - மயிலாடுதுறை
நாகப்பட்டினம்: தற்போது உள்ள அரசியல்வாதிகளுக்கு மக்கள் உடனான தொடர்பு அற்றுப்போய்விட்டது, ஆனால் நான் எப்போதும் உங்களில் ஒருவனாக இருப்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
!['நான் எப்போதும் உங்களில் ஒருவனாக இருப்பேன்'- கமல்ஹாசன்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2973341-thumbnail-3x2-k.jpg)
காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். மண்ணில் தங்கம் கிடைத்தாலும், வைரம் கிடைத்தாலும், பசித்தால் அதனை உணவாக உண்ண முடியாது. மண்ணையும், மக்களையும் அழைத்து மக்கள் விரும்பாத எந்த திட்டங்களையும் செயல்படுத்த கூடாது.மயிலாடுதுறை தொகுதி மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் என்னிடம் கூறியுள்ளனர். மக்களில் ஒருவராக இருக்க கூடிய வேட்பாளர் ரிபாயுதீன், அவர் வெற்றி பெற்று மக்களைக்கு சென்றால்தான் மக்களின் குறைகளை தீர்க்க முடியும். தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும். ஆனால் தற்போது இருக்கும் மத்திய அரசு தமிழகத்தை கொல்லைப்புறமாக மாற்ற முயற்சிக்கிறது. இந்தியாவின் தலைவாசலாக தமிழகத்தை மாற்ற வேண்டும்.
ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமைய வேண்டும். நமது சின்னமான டார்ச்லைட் வெளியே தெரியக்கூடாது என்று மறைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதன் வெளிச்சத்தில் மக்கள் பயன் பெற்று வெளியில் வந்து விட்டார்கள். நான் காலதாமதமாக உங்களை சந்திக்க வந்து விட்டேன். முன்பே வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மக்களுடனான தொடர்பு அரசியல்வாதிகளுக்கு இருக்கவேண்டும். ஆனால் தற்போது உள்ள அரசியல்வாதிகளுக்கு மக்கள் உடனான தொடர்பு அற்றுப் போய்விட்டது. ஆனால் நான் எப்போதும் உங்களில் ஒருவனாக இருப்பேன். மக்கள் குறைகளை போக்குவதற்கு நமது வேட்பாளர் ரிபாயுதீனுக்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என தெரிவித்தார்.