தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினர் கைது - வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு

நாகப்பட்டினம்: ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

போராட்டம்
போராட்டம்

By

Published : Dec 17, 2020, 6:21 AM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

முற்றுகையிட முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினர்

இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாகப்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அக்கட்சியினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். ரயில் நிலையம் முன்பு பாதுகாப்பு காரணங்களுக்காக குவிக்கப்பட்டிருந்த காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

போராட்டம்

அதனைத் தொடர்ந்து ரயில் நிலையம் முன்பாக மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றோர் கைது!

ABOUT THE AUTHOR

...view details