தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடு வீடாகச் சென்று முகக்கவசங்கள் வழங்கிய எம்எல்ஏ - பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் மற்றும் சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள்

நாகை: தரங்கம்பாடி பேரூராட்சி பகுதிகளில் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ், வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார்.

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் வீடு வீடாக சென்றுகு முகக் கவசங்கள் வழங்கினார்
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் வீடு வீடாக சென்றுகு முகக் கவசங்கள் வழங்கினார்

By

Published : Mar 30, 2020, 10:15 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 6ஆவது நாளாக 144 தடை உத்தரவு நீடிக்கிறது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு சுகாதாரப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பேரூராட்சிக்குள்பட்ட 18ஆவது வார்டு பகுதியிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணியின்போது பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் மற்றும் சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி சுகாதாரமாக வீட்டுக்குள்ளேயே வசிக்க அறிவுரைகள் வழங்கினர்.

பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் வீடு வீடாகச் சென்று முகக்கவசங்கள் வழங்கினார்

இதில் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: கரோனா அச்சம் தெரியாமல் இறைச்சி வாங்க குவிந்த மக்கள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details