உலகம் முழுவதும் கரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய 175 தமிழர்கள் சென்னை, கேளம்பாக்கம் அரசு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நடத்திய முதல் கட்ட கரோனா பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் வந்ததை அடுத்து, அதில் 130 நபர்கள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 40 பேர் முகாமிலேயே தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் இன்று ( ஜூன் 17) உயிரிழந்தார்.
இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கரோனா இல்லாமல் அரசு முகாம்களில் இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்புங்கள் - தமிமுன் அன்சாரி - தமிமுன் அன்சாரி
நாகப்பட்டினம் : வெளி நாடுகளில் இருந்து திரும்பி, சென்னை அரசு முகாம்களில் தங்கி இருக்கும் கரோனா தொற்று இல்லாத தமிழர்களை உடனடியாக அவர்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கக் கோரி சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
![கரோனா இல்லாமல் அரசு முகாம்களில் இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்புங்கள் - தமிமுன் அன்சாரி தமிமுன் அன்சாரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7649991-274-7649991-1592376944941.jpg)
தமிமுன் அன்சாரி
இதையும் படிங்க : வீட்டுமனை மோகம்: ஏமாற்றமடைந்த ரயில்வே ஊழியர்கள்