தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய சுகாதார மையம் கட்டித்தருவதாக எம்.எல்.ஏ பவுன்ராஜ் உறுதி!

மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜிடம் புதிய கட்டடம் கட்டித் தரக்கோரி மருத்துவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ்
பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ்

By

Published : Jul 7, 2020, 6:42 PM IST

நாகப்பட்டினம்: பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தரங்கம்பாடி தாலுகா மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் அந்த ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த கட்டடம் 1987ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த சுகாதார நிலையத்தில் மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம், தலைச்சங்காடு, வானகிரி, மேலையூர், நெய்வாசல் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளிலிருந்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்த சுகாதார நிலையத்தில் 2 மருத்துவர்கள், 4 செவிலியர்கள் உள்பட 13 பேர் பணியாற்றுகின்றனர். இங்கு மகப்பேறு மற்றும் பொது மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுவதாலும், மழைக்காலங்களில் தண்ணீர் உட்புகுவதாலும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகளின் வருகை குறைவாகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இத்தகவல் அறிந்த பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவரிடம் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவைப் பெற்றுக்கொண்ட பவுன்ராஜ், தமிழ்நாடு அரசிடமும் சுகாதாரத்துறை அமைச்சரிடமும் கேட்டு விரைவில் புதிய கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details