தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த பணத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய எம்எல்ஏ - Nagapattinam District Tharangambadi

நாகப்பட்டினம்: கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் 6 ஆயிரத்து 200 குடும்பத்தினருக்கு அதிமுக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் தன் சொந்த நிதி ரூ.13 லட்சத்தில் அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.

அத்தியாவசிய பொருட்களை வழங்கிய எம்எல்ஏ பவுன்ராஜ்
அத்தியாவசிய பொருட்களை வழங்கிய எம்எல்ஏ பவுன்ராஜ்

By

Published : Apr 23, 2020, 2:19 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் டெல்லி சமய மாநாட்டிற்கு சென்று வந்த மூன்று பேர், அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவர் என நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் வசித்த பகுதிகளான பொறையார், திருக்களாச்சேரி, ஆயப்பாடி பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.

அத்தியாவசிய பொருட்களை வழங்கிய எம்எல்ஏ பவுன்ராஜ்

இக்காரணத்தினால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வருவாய்துறையினர், தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகத்தினர் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையாரில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 6 ஆயிரத்து 200 குடும்பத்தினருக்கு அதிமுக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் தன் சொந்த நிதியில் இருந்து ரூபாய் 13 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ட்ரோன் கேமராவை கண்டு ஓடிய இளைஞர்கள் - வெளியான வீடியோ

ABOUT THE AUTHOR

...view details