தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு - பெரியார் அரசு மருத்துவமனை

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் மின் விளக்குகள், மின் விசிறிகள் சரிவர இயங்கவில்லை என குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட நிலையில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

By

Published : Sep 15, 2019, 8:16 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பெரியார் அரசு மருத்துவமனை உள்ளது. இதில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புறநோயாளிகளாகவும் மருத்துவமனையில் தங்கியும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் எலும்பு முறிவு பிரிவு, ஆண்கள் சிகிச்சைப் பிரிவு, தீவிர காய்ச்சல் பிரிவு போன்ற இடங்களில் மின்விளக்குகள், மின் விசிறிகள் ஆகியன பல்வேறு இடங்களில் சரிவர இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மின் விளக்குகள், மின் விசிறிகள் சரிவர செயல்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

தொடர்ந்து, செயல்படாத மின் விளக்குகள், மின் விசிறிகளை தனது சொந்த செலவில் சரிசெய்து தர ஒப்புக்கொண்டு மருத்துவமனை நிர்வாகிகளிடம் தெரிவித்துச் சென்றார்.

ABOUT THE AUTHOR

...view details