தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திராவிட தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக இருப்பவர்கள் தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது - தமிமுன் அன்சாரி - தேரழுந்தூர்

பாரதிய ஜனதா கட்சி நடிகர் விஜயை எதிர்ப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என தமிமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேட்டி அளித்தார்.

திராவிட,தமிழ் தேசிய அரசியலுக்கும் எதிராக இருப்பவர்கள் தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது! :தமிமுன் அன்சாரி
திராவிட,தமிழ் தேசிய அரசியலுக்கும் எதிராக இருப்பவர்கள் தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது! :தமிமுன் அன்சாரி

By

Published : Jun 20, 2023, 9:08 AM IST

திராவிட,தமிழ் தேசிய அரசியலுக்கும் எதிராக இருப்பவர்கள் தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது! :தமிமுன் அன்சாரி

மயிலாடுதுறை:குத்தாலம் அருகே தேரழுந்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நேற்று(ஜூன் 19) நடந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி, நடிகர் விஜயின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்தார்.

இதனையடுத்து அவர் பேசுகையில், ''பீகார் மாநிலம், பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் தங்களின் நிலைப்பாட்டின் முடிவுகள் குறித்து ஜூன் 23ஆம் தேதி ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது'' எனக் கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து: ''இந்தியாவில் பிடிக்காதவர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை ஏவி விடுவது எல்லாம் அரசியல் ரீதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் தான் இறுதி முடிவு எடுக்கவேண்டும்.

அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தில் நெருக்கடி கொடுப்பது மனிதாபிமானமற்ற செயல். திமுகவினர் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது தேவையற்ற விமர்சனங்களை வைப்பது நாகரிகமற்ற செயல் என்று நாங்கள் கருதுகிறோம்'' எனக் குறிப்பிட்டார்.

நடிகர் விஜயின் அரசியல் குறித்து: ''நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மாணவர்களைச் சந்தித்தார். அது பாராட்டத்தக்க விஷயம். நடிகர் விஜய் இதுவரை அரசியல் கட்சியைத் தொடங்கவில்லை. கட்சி தொடங்கும்போது அவருடைய அரசியல் சித்தாந்தத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

நடிகர் விஜய் அவருடைய ரசிகர்களை அரசியல் மையப்படுத்த வேண்டும், சினிமாவில் இருப்பவர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லவில்லை. சினிமாவை மட்டுமே மூலகாரணமாக கொண்டிருக்கக் கூடாது. பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா ஆகிய தலைவர்களைப் பற்றி மாணவர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று விஜய் சொல்வது நல்ல கருத்து.

திராவிட அரசியலையும், தமிழ்த் தேசிய அரசியலையும் சார்ந்து யார் அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தாலும் அதனை வரவேற்கிறோம். திராவிடம் சார்பாக இருந்தால்தான் தமிழ்நாட்டில் அரசியலில் ஜெயிக்க முடியும். திராவிட அரசியலுக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் எதிராக இருப்பவர்கள் தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது.

திராவிட அரசியலையும் தமிழ்த் தேசிய அரசியலையும் எதிர்ப்பதால்தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ளது. நடிகர் விஜய் பெரியார், அம்பேத்கர், காமராஜரைப் பற்றி எல்லாம் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று கூறுவது பாரதிய ஜனதாவிற்கு பிடிக்கவில்லை. எனவே, பாரதிய ஜனதா கட்சி நடிகர் விஜயை எதிர்ப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை'' என்றார்.

திரைத்துறையினரும் அரசியளும்:திரைத்துறையில் இருந்து யார் அரசியலுக்கு வந்தாலும் அங்கீகரிப்பது அரசியல் மரபாகிவிட்டது. அண்ணா, கலைஞர், ஜெயலலிதா, சீமான், விஜயகாந்த், உதயநிதி ஆகியோர் திரைத்துறையில் இருந்து வந்தவர்கள் தான். தற்போது விஜய் வருவதாக சொல்கிறார்கள். வரக்கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை’’ எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது மாநிலச் செயலாளர் நாகை சையது முபாரக், மாவட்டச் செயலாளர் ஹாஜாசலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:Minister Ponmudi: அமைச்சர் பொன்முடிக்கு புதிய சிக்கல்.. விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details