தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 7, 2020, 9:41 PM IST

ETV Bharat / state

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

மயிலாடுதுறை: புயலால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி தாலுகாவை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்துள்ளார். அதில் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் புயல் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனை இன்று (டிச.7) அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

கடல் சீற்றத்தால் சேதமடைந்த துறைமுக அலைதடுப்பு சுவர், குட்டியாண்டியூரில் கடலரிப்பு பகுதிகள், நல்லாடை கிராமத்தில் விவசாய நிலம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அப்போது நீரில் மூழ்கிய பயிர்களை விவசாயிகள் அமைச்சரிடம் காண்பித்தனர். உடனே அவர் உரிய நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து சங்கரன்பந்தலில் உள்ள முகாமில் தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்தார். அங்கு செய்யப்பட்டிருந்த மருத்துவ வசதிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் தலை உடையார் கோவில் பத்து, கிடாரங்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்று ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: நிவர் புயல்: விழுப்புரத்தில் ஆய்வுசெய்த மத்திய குழு

ABOUT THE AUTHOR

...view details