நாகப்பட்டினம்:விளம்பரம் தேடுவதற்கே மு.க. ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்குகிறார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.
நாகையில் நிவர், புரெவி புயல் பாதிப்புகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "நாகை மாவட்டத்தில் 122 இடங்களில் ஆறுகள் உடைப்பு ஏற்பட்டு 60ஆயிரத்து 583 பேர் முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். 1,001 வீடுகள் சேதமடைந்துள்ளன. 252 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.