தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரம் ஆதீனத்துடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு - dharmapuram

தருமபுரம் ஆதீனத்தினை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சந்தித்தார். அங்கு 27,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார.

தருமபுரம் ஆதீனத்துடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு
தருமபுரம் ஆதீனத்துடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு

By

Published : Jun 4, 2022, 10:57 AM IST

Updated : Jun 4, 2022, 12:38 PM IST

மயிலாடுதுறை:அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜூன் 4) மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் ஆய்வு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் அதிகாலை மயிலாடுதுறைக்கு வந்தடைந்த சேகர் பாபு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

இதையடுத்து மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்தினை சந்தித்தார். பின்னர் தருமபுரம் ஆதீனத்தில் 25 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருள் நிலைய விருந்தினர் மாளிகையை திறந்து வைத்தார்.

தருமபுரம் ஆதினத்துடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு

அதோடு ஆதீன வளாகத்தில் 27,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த பயணத்தின்போது அமைச்சருடன் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை அருகே காவிரி ஆற்றில் பாலம் கட்டும் பகுதியில் கரை அரிப்பு

Last Updated : Jun 4, 2022, 12:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details