மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா திருவெண்காடு பகுதியில் உள்ள இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளி கட்டடங்களை, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பாழடைந்து போன பள்ளிகளை சீரமைத்து மாணவ, மாணவியர்களை அதிகப்படியாக சேர்ப்பதற்கு அலுவலர்களிடையே ஆலோசனை மேற்கொண்டார்.
’கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தால் நடவடிக்கை’ - அமைச்சர் சேகர்பாபு - சீர்காழி திருவெண்காடு கோயில்
மயிலாடுதுறை: சீர்காழி அருகே இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு வாடகை செலுத்தாமல் யார் அனுபவித்துக் கொண்டிருந்தாலும் உரிய வாடகை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
![’கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தால் நடவடிக்கை’ - அமைச்சர் சேகர்பாபு minister](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12100570-83-12100570-1623427227930.jpg)
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சேகர் பாபு கூறியதாவது, ”இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு வாடகை செலுத்தாமல் யார் அனுபவித்துக் கொண்டிருந்தாலும் உரிய வாடகை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறிய, பெரிய கோயில்களை விரைவில் கணக்கெடுத்து தொல்லியல் துறை அனுமதியுடன் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்களே கோயில்களில் அர்ச்சகராக பணியாற்ற அமர்த்தப்படுபவர்” என்றார்.
இந்த ஆய்வின்போது, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சீர்காழி பன்னீர்செல்வம், பூம்புகார் நிவேதா முருகன், மயிலாடுதுறை ராஜகுமார், அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.