தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பரிசு தொகையை விமர்சிப்பவர்களுக்கு அமைச்சர் பதிலடி!

மயிலாடுதுறை: பொங்கல் பரிசு தொகையை விமர்சிப்பவர்கள் இதயமுள்ள மனிதர்களாக இருக்க முடியாது என அமைச்சர் ஓ.எஸ். மணியன் கடுமையாக சாடியுள்ளார்.

பரிசு தொகையை விமர்சிப்பவர்களுக்கு அமைச்சர் பதிலடி
பரிசு தொகையை விமர்சிப்பவர்களுக்கு அமைச்சர் பதிலடி

By

Published : Dec 21, 2020, 7:03 PM IST

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் சித்தமல்லி, ஆனந்ததாண்டவபுரம், மாப்படுகை, வாணாதிராஜபுரம் ஆகிய நான்கு இடங்களில் அம்மா மினி கிளினிக் சேவையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று (டிச.21) தொடங்கிவைத்தார்.

அப்போது அவருடன் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

பரிசு தொகையை விமர்சிப்பவர்களுக்கு அமைச்சர் பதிலடி

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்ததாவது, "புதிய கட்சி தொடங்குபவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பெயரை சொல்லாமல் இருக்க முடியாது என்பதுதான் யதார்த்தமான உண்மை. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என மாநில பாஜக தலைவர் எல். முருகன் கூறியிருப்பது அவரது பேச்சுரிமை.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகையை அதிகரித்துள்ளார்.

இதை விமர்சிப்பவர்கள் இதயமுள்ள மனிதர்களாக இருக்க முடியாது" என்றார்.

இதையும் படிங்க: மூச்சுப் பயிற்சி செய்து காட்டிய அமைச்சர்: வைரல் காணொலி!

ABOUT THE AUTHOR

...view details